நம் மீது கர்த்தர் கொண்ட அன்பினால்
நம் பாவங்களை அவர் சுமந்தாரே - 2
நமக்காய் அடிக்கப்பட்டார்
நமக்காய் ஏற்றுக் கொண்டார்
நன்றியால் துதித்திடுவோம்
நன்றியால் துதித்திடுவோம்
நம் பாவம் யாவும் நீங்கிற்றே - 2
நன்றி
நன்றி இயேசு நாதா - (2)
1. பாவத்தில் சிக்கிய நம்மை மீட்டிட
சிலுவையில் தாம் இரத்தம் சிந்தினார் -
2
ஆணிகளால் காயப்பட்டார்
நமக்காய் ஏற்றுக் கொண்டார் - நன்றியால்
2. நமது சாபங்களை போக்கிட
தமது சரீரத்தை
கொடுத்தாரே - 2
முட்கிரீடம்
வைத்தனர்
நமக்காய் ஏற்றுக் கொண்டார் - நன்றியால்
3. நித்திய வாழ்வை நமக்கு தந்திட
தன்னையே பலியாக கொடுத்தாரே - 2
ஈட்டியல் குத்தப்பட்டார்
நமக்காய் ஏற்றுக் கொண்டார் - நன்றியால்
4. நாம் சமாதானம் பெற்றிட
அவமானங்கள் யாவும் தாங்கினார் - 2
தூஷித்து நகைத்தனர்
நமக்காய் ஏற்றுக் கொண்டார் - நன்றியால்
- PRAMIL
https://www.youtube.com/watch?v=luB2fnLIrbA
No comments:
Post a Comment