நான் தன்னந்தனியே நடந்து வந்தேன்
தாங்கிடுவார் எவருமின்றி - 2
ஒரு தாயைப் போல தேற்றி
ஒரு தந்தை போல காத்து -2
தாங்கினீர்
என்னை தப்புவித்தீர்
ஏந்தினீர்
என்னை சுமந்திட்டீர் - 2
1. பாவியாக வாழ்ந்ததாலே
பாசம் கொள்வோர் இல்லை
தேவனின்றி வாழ்ந்ததாலே
தினமும் வாழ்வில் தொல்லை - 2
கதறினேன் நீரோ
இறங்கினீர் - நான் -2
பாவங்களை கழுவியே
நிறுத்தினீர்
நிலை நிறுத்தினீர் - தாங்கினீர்
2. உண்மை அன்பு எங்குமின்றி
மனமுடைந்து
போனேன்
உம்மை தேட மறந்தாலே
நிம்மதியின்றி வாழ்ந்தேன் - 2
வாடினேன் நீரோ தேடினீர்
- நான் -2
தனிமையிலே இனிமையாய்
வறுமையிலே அருமையாய்
நடத்தினீர் அன்பாய் நடத்தினீர் - தாங்கினீர்
3. பாவி என்னில் பாசம் வைத்த
எந்தன் இயேசுராஜா
நீசன் என்னை
தேடி வந்த
இயேசு மகாராஜா
-2
மீட்கவே ஜீவன் தந்தீரே - என்னை - 2
பாடுகளை சகித்துமே
நிந்தைகளை சுமத்துமே
ஓடுவேன் உமக்காய் ஓடுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன்
No comments:
Post a Comment