06 September 2024

நான் கர்த்தரைப் பாடுவேன்

நான் கர்த்தரைப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் கர்த்தரை பாடுவேன்

                        என் மீட்பரை பாடுவேன்

                        இயேசுவை பாடுவேன்

                        என் நேசரை பாடுவேன்

 

1.         என்னை மீட்டெடுத்த தேவ தேவனே

            எந்நாளும் போற்றி போற்றி பாடுவேன்

            பாவ சேற்றினின்று தூக்கி எடுத்தவரே

            பாடி பாடி துதித்திடுவேன்

 

2.         ஆவியின் பெலன் அளித்த அற்புதர் இவர்

            ஆற்றி தேற்றிடும் நேசரும் இவர்

            அன்பரின் பாதம் எந்தனின் வாஞ்சை

            ஆவியில் பாடி களித்திடுவேன்

 

3.         அரணும் கோட்டையும் கேடகம் இவர்

            ஆபத்து நேரம் காப்பவர் இவர்

            இயேசுவை நம்புவேன் இரட்சிப்பு நிச்சயம்

            இன்றும் என்றும் வாழ்ந்திருப்பேன்

 

4.         வாரும் எந்தன் ஆத்ம நேசரே

            வயல் வெளிகளில் தங்கி இருப்போம்

            காலை ஜெபத்தின் இன்ப சத்தத்தை

            உமக்கு தருவேன் நேச மேன்மையை

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...