எண்ணிமுடியாத
அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத
அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே - 2
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது
ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ - 2
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட
வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல்
சுமந்ததைப் போற்றிப் பாடுவேன் - 2
இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா - 2 - கோடி கோடி
2. தனிமையிலே நான் அழுதபோதெல்லாம்
ஒரு தாயைப்போல
தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப்
போதெல்லாம்
ஒரு தகப்பனைப்போல்
தாங்கியதை
போற்றிப் பாடுவேன் - 2
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும்
வெறுக்காமல் நேசித்தீரையா - 2
- கோடி கோடி
3. சிறுமையும் எளிமையுமான
என்னையும்
கொண்டு சிங்காரத்தில்
வைத்தீரே உம்மைப் பாடுவேன்
அலங்கோலமாக
இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன்
- 2
புழுதியிலிருந்து
எடுத்தீரையா
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா - 2 - கோடி கோடி
- JOHN WESLEY MUTHU
https://www.youtube.com/watch?v=b7PY66NuK80
No comments:
Post a Comment