10 June 2024

நிசேயா விசுவாசப் பிரமாணம்

விசுவாசப் பிரமாணம்-நிசேயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

நிசேயா விசுவாசப்பிரமாணம்

            வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஓரே தேவனை விசுவாசிக்கிறேன்.

            ஓரே கர்த்தருமாய், தேவனுடைய ஓரே பேரான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய் தேவனில் மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார்; நமக்காகப் பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம்பண்ணப்பட்டார்; வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார். அவருடைய ராஜியத்துக்கு முடிவில்லை.

            கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது ஸ்தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன்.

            ஆமென்.

 

 

 

 

 

அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம்

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...