08 June 2024

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

            ஆலயம் கூடி வந்தோம்

            துதி பலிகள் செலுத்தியே நாங்கள்

            உம்மை போற்ற வந்தோம் (2)

 

                        கர்த்தர் செய்த நன்மைக்காக

                        நன்றி செலுத்த வந்தோம்

                        நம்மை மறவா அவர் கிருபை

                        எண்ணியே துதிக்க வந்தோம்

 

1.         உடன்படிக்கை எனக்குத் தந்து

            உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்

            மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை

            ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

 

2.         வாதைகள் என்னை சூழ்ந்தபோது

            செட்டைகளாலே எனை மறைத்தீர்

            பாதைகள் எல்லாம் காக்கும்படி

            தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

 

3.         தேவைகள் நெருக்கி நின்றபோது

            அற்புதமாகப் பெருக வைத்தீர்

            கண்ணீரின் பாதையில் திகைத்தபோது

            கண்மணியே என்று என்னை அழைத்தீர்

 

 

- Pastor Alwin Thomas

 

 

https://www.youtube.com/watch?v=MwLdRcHTwDY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு

பாடல் Youtube Link     Text file Download               ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு             உயர்ந்த ம...