07 June 2024

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே

            உங்க கரம் இருக்க பயமில்லையே - 2

                        எந்த பாதையையும் தாண்டிடுவேன்

                        எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - 2

            உங்க கரம் இருக்க பயமில்லையே - 2

 

1.         கருவிலே என்னைக் கண்டவரே

            பெயர் சொல்லி என்னை அழைத்தவரே - 2

            நன்மைகள் எனக்காய் செய்பவரே

            வழுவாமல் என்னைக் காத்தவரே

            இனிமேலும் என்னைக் காப்பவரே - என்னை

 

2.         புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்

            அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் - 2

            மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்

            வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி

            எனக்கான நன்மையைக் காணச் செய்வீர்         

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...