12 June 2024

தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

தேவனே ஸ்தோத்திரம் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனே ஸ்தோத்திரம்

                        இயேசுவே ஸ்தோத்திரம்

                        ஆயிரம் ஆயிரம் ஆசிகள்

                        அருள் மழை போல் என்னில் பொழிந்தீரே

 

1.         துன்பக் கடலை தாண்டிடும் நேரம்

            துயராய் மாறி சோர்ந்திடும் வேளை

            கர்த்தர் தாம் செய்த நன்மைகள் எண்ணி

            கணக்கில்லா ஸ்தோத்திரம்

            செலுத்திடுவேனே - தேவனே

 

2.         சத்துரு என்னை சடுதியில் நெருக்கி

            இல்லாமற் போக எதிர்த்திடும் போது

            இயேசுவே வந்து யுத்தம் செய்தீர்

            சாத்தானின் தலையை

            நசுக்கி விட்டீரே - தேவனே

 

3.         செய்யாத குற்றங்கள் சுமத்திடுவார்கள்

            சொல்லாத வார்த்தைகள் சொன்னாய் என்பார்கள்

            எவ்வித பொய்யையும் எதிர்க்காமல் சகித்து

            என் நெஞ்சை அன்பினால்

            நிறைந்திட செய்தீர் - தேவனே

 

4.         ஈலோக இன்பங்கள் இடைவிடாதிருக்க

            பொல்லாத மனிதர்கள் பொறுமையை சோதிக்க

            உம்மைப் போல் ஜீவிக்க

            உத்தமர் இயேசுவே

            உன்னத பெலனை உள்ளத்தில் தந்தீர் - தேவனே

 

 

 

https://www.youtube.com/watch?v=GudgfzeNhIk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...