12 June 2024

தேவனை உயர்த்தித் துதியுங்கள்

தேவனை உயர்த்தித் துதியுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனை உயர்த்தித் துதியுங்கள்

                        அவர் நாமத்தைப் போற்றியே

                        தேவனின் செயல் அதிசயமென்று

                        அதிசயமென்று சொல்லி

 

1.         கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்

            திடபெலனும் ஏழைக்கு அடைக்கலமுமானார் - 2

            படும்பலவந்தர் ஆரவாரமென்றும் ஆரவாரமென்றுமே - 2

 

2.         இவரே நம் தேவன்இவர் நம்மை இரட்சித்தார்

            இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் - 2

            இவர் பகைவனை வென்று

            கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார் - 2

 

3.         கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட

            உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் - 2

            பக்தருக்கென்று பலத்த நகரம்

            பலத்த நகரம் உண்டு - 2

 

4.         அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம் தன்னில் நம்மை

            மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார் - 2

            மன்னரும் தேவ சமாதானந் தங்கும்

            சமாதானம் தங்கிடுமே - 2

 

5.         புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்

            பனி போல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார் - 2

            இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்

            இன்னல் பெருகிடுமே - 2

 

6.         மறைவிடமுண்டு மன்னனின் ஜனத்திற்கே

            குறை விசாரிக்கும் கோபத்தின் நாளிலே - 2

            அறைக்குள் மறைந்து ஆனந்திக்கும் சபை

            ஆனந்திக்கும் சபையே - 2

 

7.         சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது

            அருந்த யாவருக்கும் ஆயத்தமாக்குவார் - 2

            நிந்தையை நீக்கி கண்ணீரைத் துடைத்து

            கண்ணீர் துடைத்திடுவார் - 2

 

https://www.youtube.com/watch?v=kRRnvHYDWeE https://www.youtube.com/watch?v=Dq627IkWO14

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...