12 June 2024

தேவனையே துதித்திடுவோம்

தேவனையே துதித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேவனையே துதித்திடுவோம்

            தினமும் அவர் துதி சாற்றிடுவோம்

            திருரத்தம் சிந்தி மீட்டெடுத்தார்

            தூயவர் பாதம் பணிந்திடுவோம்

 

                        ஆர்ப்பரித்தே நாம் ஆனந்திப்போம்

                        அல்லேலூயா பாடுவோம்

                        அல்லும் பகலும் அன்பர் இயேசுவின்

                        அன்பதை எண்ணியே வாழ்ந்திடுவோம்

 

2.         சென்ற காலம் முழுவதிலும் சேதம்

            அணுகாமல் பாதுகாத்தார்

            கூப்பிடும் வேளையில் செவி கொடுத்தார்

            தேவைகள் யாவும் ஈந்தளித்தார் - ஆர்ப்பரித்தே

 

3.         லோக சிந்தை வெறுத்திடுவோம்

            பாவ சந்தோஷம் நீக்கிடுவோம்

            பரிசுத்தர் இயேசுவைப் பற்றிக் கொள்வோம்

            பரமனின் பாதம் பின் செல்லுவோம் - ஆர்ப்பரித்தே

 

3.         ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            உமக்காய் வாழ்ந்திட கிருபை செய்வீர்

            தூய வழிதனில் நடந்திடவே

            உம் அருள் ஈந்தே ஆதரிப்பீர் - ஆர்ப்பரித்தே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...