தேவனைப் பாடி துதிப்போம்
இயேசுவை போற்றி புகழ்வோம்
தூய ஆவியானவரை
வாழ்த்தியே பாடிடுவோம்
1. ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
வீணை தம்புரு நாதத்தோடும்
பாடுவோம் திரியேக தேவனையே
உயர்த்துவோம் அவரின் நாமத்தையே
- தேவனை
2. துதிகளின் மத்தியில் வசிப்பவரை
துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய்
ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே-நாம்
ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே - தேவனை
3. மீட்கப்பட்ட என் ஆத்துமாவே
மீட்பரையே போற்றி பாடுவாயே
மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே
மீட்பரின் மனம் மகிழட்டுமே
- தேவனை
4. பூரிகை எக்காளம் முழங்கிடுவோம்
உன்னத தேவனை போற்றிடுவோம்
அல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம்
ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம்
- தேவனை
https://www.youtube.com/watch?v=Zo_93GdCi2Y
No comments:
Post a Comment