24 March 2026

ஆயத்தம் ஆயத்தம் ஆயத்தமாகிடு மகனே

நிஜீ.கீதங்கள்:1305

To Download Txt Lyrics file

 

                   ஆயத்தம் ஆயத்தம் ஆயத்தமாகிடு மகனே

                   கர்த்தரின் சகல ஆசீர்வாதங்களும்

                        ஆயத்தமாயிரு

                        அதை சுதந்தரிக்க விசுவாசத்தோடு

                        ஆயத்தமாகிடுவோம்

 

1.         பக்தியோடு ஜெபித்திடு

            காலையில் ஆயத்தமாவோமே

            பரவசத்தோடு பாடித் துதித்திட

            ஆயத்தமாவோமே

            ஆயத்தம் செய்திடும்

            ஆண்டவர் இயேசு உடனிருக்கிறார்

            ஆவியானவரின் துணையோடு

            இன்று ஆயத்தமாகிடுவோம்

 

2.         ஆயத்தம் என்னும் பாதரட்சையை

            காலில் அணிந்திடுவோம்

            ஆவியின் சேனைகளோடு போரிட

            ஆயத்தமாகிடுவோம்

            சேனையின் அதிபதி முன்னே செல்ல

            ஆயத்தமாகிவிட்டார்

            உருவின் பட்டயம் கையிலெடுத்து

            உன்னுடன் வந்திடுவார்

 

3.         ஆதியின் தேவன் ஆயத்தம் செய்ய

            ஆசீர்வாதங்கள்

            இன்று கண்டிட ஆவியானவர்

            கண்களை திறந்தார்

            ஆதாம் இழந்தான்

            நமது இயேசு மீட்பு கொடுத்தார்

            ஆசீர் பெற்றிட அசதியின்றி

            ஆயத்தமாகிடுவோம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...