ஆயனே தூயனே வாரும் - இந்த
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன் -
உலக
மாயையால் பாவியாய் ஆனேன்
இயேசுவே நாதரே
வாரும் - எங்கள்
பாடலின் வேண்டுதலைக்
கேளும்
1. தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
- உம்மை
நாடி வந்து பாடுகின்றேன்
கேளுமே - 2
மானிடர் சுமைகளைச் சிலுவையாய்
- நீர்
சுமந்ததை இப்புவி அறியுமே
- 2
கேளுங்கள் தரப்படும் என்றவர்
- நீர்
கேடுகள் அழிக்கவே பிறந்தவர்
- இயேசுவே
2. நெஞ்சிலே நிம்மதி இல்லையே
- உம்மைக்
கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
- 2
வஞ்சகர் வலைதனில் மாயமே -
அதை
அறுத்திடும் இயேசு உம் நாமமே
- 2
தாயினை மிஞ்சிடும் அன்பையே
- உம்மில்
காண்கிறேன் கர்த்தரே உண்மையே
- இயேசுவே
No comments:
Post a Comment