1. ஆயிரக்கணக்கான
வருடங்களாய் எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் - எம்
யேசு ரட்சகரே எழுந்தருளும்.
ஓசன்னா தாவீதின் புதல்வா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
2. மாமரி வயிற்றில் பிறந்தவரே - மா
யோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே. - ஓசன்னா
3. கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் - அங்கு
கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை
நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர் -
ஓசன்னா
4. குருடர் அநேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன், செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அநேகர் நலம் பெற்றார் - எம் கடவுளே
எம்மோடு வருவீரே. - ஓசன்னா
5. யூதேயா நாட்டில் மகிழ் பெற்றீர் - எம்
யூத ராஜா என்று முடி பெற்றீர்
எருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
யேசு ரட்சகரே அரசாள்வீர். - ஓசன்னா
6. பாவிகளைத் தேடிவந்தவரே - எம்
பாவங்களைப் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே. - ஓசன்னா
7. கோவேறு குட்டியே ஆசனமாய் - எம்
குழந்தையின் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக்கொடியாய் - எம்
கர்த்தனே சீக்கிரம் நடப்பீரே. - ஓசன்னா
8. உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மாபுதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உட்புகுவீரே. - ஓசன்னா
No comments:
Post a Comment