24 March 2026

ஆயத்த ஜெபம் செய்ய பெலன் தாரும் சுவாமி-1

கீ.கை:268

To Download Txt Lyrics file

 

268. இராகம்: காப்பி.                                                                       தாளம்: சாப்பு

 

1.       ஆயத்த செபம் செய்ய பெலன் தாரும் சுவாமி

          அடைக்கல மாயுந்தன் துணைவேணும் நேமி.

 

2.         காயத்தால் குணக்கேடு தடைகள் வராமல்

            காப்பாற்றக் கேட்கிறேன், கிறிஸ்துவே தேவா.

 

3.         திருக்குள்ள இருதயம் மறைத்துப் போடாமல்

            சிறுமையாய்ப் பாவத்தை உணர்ந்திடச் செய்யும்.

 

4.         நரசென்ம மனுடரின் அமளி வராமல்

            நாதா நீர் கிருபையாய்க் காத்திட வாரும்.

 

5.         சாத்தானால் சோதனை மெத்தஉண் டையா

            சர்வா யுதம்தந்து காத்திடு மையா.

 

6.         சுருக்கநா ளானதால் கொதிக்கிறான் சீறி

            சுடரொளிப் பட்டயத் தூதரால் காரும்.

 

7.         ஏழுமுறை செபத்துக்குத் தடைகள் வராமல்

            இரக்கமாய் தயவுடன் நடத்துமேன் சுவாமி

 

8.         கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்

            கேடான மனமொன்றாய்ப் பொருந்திட வாரும்.

 

9.         கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி

            களிப்புடன் மன்றாட அருள்செய்யும் சுவாமி.

 

10.       வருகையின் நாள்மிக நெருங்குதே சுவாமி

            மருரூப ஆவிக்காய் தவிக்கிறேன் பாவி.

 

11.       கிருபையின் கரத்தினால் தாங்குமேன் சுவாமி

            கிறிஸ்துவின் மூலமாய் வருகிறேன் பாவி.

 

12.       இம்மானு வேலுக்கு எதிர்கொண்டு போக

            எண்ணையும் தீபமும் தாருமேன் சுவாமி.

 

13.       மறுபடி பிறந்துதற் பெருமையைக் களைந்து

            மனத்தாழ்மை அணிந்திட படிப்பியும் சுவாமி.

 

14.       இப்படி யாகவே கேட்கும்மன் றாட்டை

            இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...