24 March 2026

ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே

நிஜீ.கீதங்கள்:2410

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே - (2)

            ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும் உன்னத தேவனே - (2)

 

                        நீர் ராஜா ராஜாதி ராஜா

                        நீர் ரோஜா சாரோனின் ரோஜா - 2

                        ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்

                        பள்ளத்தாக்கின் லீலியே - 2 - ஆதியே

 

1.         ஜெபத்தை கேட்பவரே எங்களுக்கு ஜெயத்தை தருபவரே

            விண்ணப்பத்தை கேட்பவரே எங்களது கண்ணீரை காண்பவரே

            நல்லவரே வல்லவரே, உயர்ந்தவரே பெரியவரே

            பூமியில் உயர்ந்தவரே ஜாதிகளில் உயர்ந்தவரே - (2) - நீர் ராஜா

 

2.         கூப்பிடும் வேளையில் எங்களுக்கு பதிலைத் தருபவரே

            ஆபத்துக் காலத்திலே எங்களது அருகினில் வருபவரே

            யெகோவாயீரே சகாயரே, எஜமானனே என் ஏசுவே

            கரம் பற்றி நடத்துவீரே காருண்யத்தால் உயர்த்துவீரே - (2) - நீர் ராஜா

 

3.         அன்றன்றுள்ள தேவைகளை எங்களுக்கு அனுதினம் தருபவரே

            ஆதரவாயிருந்து எங்களது ஆத்துமாவை தேற்றுவீரே

            கன்மலையே காண்பவரே, ஜீவ நதியே தேவ ஆவியே

            புல் வெளியில் மேய்ப்பவரே தாகத்தை தீர்ப்பவரே - (2) - நீர் ராஜா

 

 

- Bro. G. Jacob

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...