24 March 2026

ஆத்துமமே என் உள்ளமே

சங்கீத சேவை:278

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

          ஆத்துமமே! என் உள்ளமே!

            ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்

            அன்பினால் உன்னை அழைத்தவரை

 

                             அனுபல்லவி

 

          நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்

            நன்மைகளீந்துன்னை வளர்த்தவரே - ஆத்துமமே

 

                             சரணங்கள்

 

1.         ஜீவனைக் கொடுத்துன்னை மீட்டவரே - தூத

            ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே

            ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட

            ஜீவனால் நிறைந்துன்னைக் காத்தவரே - ஆத்துமமே

 

2.         நடத்திய வழிகள் நோக்கிடுவாய் - அவர்

            நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய்

            ஆபத்தில் அடைக்கலம், ஆறுதல் இன்னலில்

            அளித்தவர் அருமை இயேசுவல்லோ! - ஆத்துமமே

 

3.         பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் - உயர்

            யோர்தானின் அலைகள் புரண்ட போதும்

            அக்கினி மேக ஸ்தம்பமாய் நின்றவர்

            அரணும் உன் கேடகமாயிருந்தார் - ஆத்துமமே

 

4.         தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத்

            தாசனாய் உயர்த்தினார் தாரணியில்

            பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத்

            தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய் - ஆத்துமமே

 

5.         ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே - புது

            ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே

            சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில்

            ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே - ஆத்துமமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...