24 March 2026

ஆதியும் நீரே அந்தமும் நீரே

நிஜீ.கீதங்கள்:52

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆதியும் நீரே அந்தமும் நீரே

                        மாறிடா நேசர் துதி உமக்கே

                        தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து

                        எந்நாளும் துதித்திடுவோம்

 

1.         தூதர்கள் போற்றும் தூயவரே

            துதிகளின் பாத்திரர் தேவரீரே

            உந்தனின் சமூகம் ஆனந்தமே

            உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

 

2.         வல்லமை ஞானம் மிகுந்தரே

            வையகம் அனைத்தையும் காப்பவரே

            ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்

            ஆண்டவர் இயேசுவை உயர்த்திடுவோம்

 

3.         செய்கையில் மகத்துவம் உடையவரே

            இரக்கம் உருக்கமும் நிறைந்தவரே

            பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே

            பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

 

4.         ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்

            ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்

            உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே

            உத்தம தேவனை பணிந்திடுவோம்

 

5.         ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்

            பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்

            மகிமையும் கனமும் துதிகளையே

            செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...