24 March 2026

ஆதியும் அந்தமுமானீர் அனாதையின்

நிஜீ.கீதங்கள்:1158

To Download Txt Lyrics file

 

          ஆதியும் அந்தமுமானீர்

            அனாதையின் சொந்தமுமானீர்

            அநாதி சிநேகத்தால் சிநேகித்தீர்

 

                                    அப்பா - உம் (2)

 

                        போற்றுவேன் புகழுவேன்

                        வாழ்த்துவேன் துதித்திடுவேன்

 

1.         உள்ளங்கையில் எம்மை வரைய

            நீட்டிக் கொடுத்தீர் உம் கரத்தை

            உள்ளமெல்லாம் நேசங்கொண்டு

            உன்னதரே உம்மைத் துதிப்பேன் - ஆதியும்

 

2.         ஆத்துமாவைக் கவர்ந்து கொண்டீர்

            ஊற்றிக் கொடுத்தீர் உம் இரத்தத்தை

            ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            பரிசுத்தரே பாதம் பணிவேன் - ஆதியும்

 

3.         நேசத்தினால் சோகமானேன்

            கிச்சிலிப் பழத்தால் தேற்றிடுவீர்

            ஆவி உடல் அத்தனையும்

            ஆர்ப்பணித்தேன் இயேசுவுக்கே - ஆதியும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...