24 March 2026

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

நிஜீ.கீதங்கள்:2058

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

C-Maj / 8 beat / T-100

 

          ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

            அடிமை நான் ஐயா

            ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்

            அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு

            அகன்று போக மாட்டேன்

 

1.         ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு

            அதன்படி நடக்கின்றேன்

            உலகினை மறந்து உம்மையே நோக்கி

            ஓடி வருகின்றேன்

 

2.         வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்

            நன்கு புரியும்படி

            தேவனே எனது கண்களையே

            தினமும் திறந்தருளும்

 

3.         வாலிபன் தனது வழிதனையே

            எதனால் சுத்தம் பண்ணுவான்

            தேவனே உமது வார்த்தையின்படியே

            காத்துக் கொள்வதனால்

 

4.         நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்

            தீபமே உம் வசனம்

            செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே

            தேவனே உம் வாக்கு

 

5.         தேவனே உமக்கு எதிராய் நான்

            பாவம் செய்யாதபடி

            உமது வாக்கை என் இருதயத்தில்

            பதித்து வைத்துள்ளேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...