ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்
புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
1. என்னோடே
ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்
ஒருமித்து
அவர் நாமம் உயர்த்திடுவோம் - 2
நடனமாடி நன்றி சொல்வோம் - (2) - ஆண்டவரை
2. ஆண்டவரைத்
தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித
பயத்தினின்றும் விடுவித்தார் - 2 - நடனமாடி
3. அவரை
நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது
முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல - 2 - நடனமாடி
4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள்
அனைத்தினின்றும் விடுவித்தாரே - 2 - நடனமாடி
5. கர்த்தர்
நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை
நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் - 2 - நடனமாடி
6. சிங்கக்
குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை
நாடுவோருக்கு குறையேயில்லை - 2 - நடனமாடி
7. கர்த்தர்
கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர்
செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும் - 2 - நடனமாடி
8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர்
கேட்கிறார்
துன்பங்கள்
அனைத்தினின்றும் விடுவிக்கிறார் - 2 - நடனமாடி
9. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்
நைந்த
நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார் - 2 - நடனமாடி
10. நீதிமானுக்கு
வரும் துன்பம் அநேகமாயிருக்கும் - அவை
அனைத்தினின்றும்
அவர்தாமே விடுதலை தருவார் - 2 - நடனமாடி
11. ஆண்டவரில்
என் ஆன்மா மேன்மைபாராட்டும்
சிறுமையுற்றோர்
அதைக்கேட்டு அக்களிப்பார்கள் - 2 - நடனமாடி
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment