24 March 2026

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

நிஜீ.கீதங்கள்:1459

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

                        அனைத்து உயிர்களே பாடுங்கள் - 2

 

                        ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்

                        எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

 

1.         மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் - (2)

            ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் - (2)

 

                        ராஜாதி ராஜா வாழ்க வாழ்க

                        கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க

                        எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க

                        இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க

 

2.         எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள் - (2)

            வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள் - (2) - ராஜாதி

 

3.         துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் - (2)

            அவர் நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் - (2) - ராஜாதி

 

4.         ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள் - (2)

            சுவாசமுள்ள யாவருமே இயேசுவை துதியுங்கள் - (2) - ராஜாதி

 

5.         நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே - (2)

            நம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும் நம்பத்தக்கவர் - (2) - ராஜாதி

 

6.         இயேசுவே நம் இரட்சகர் என்று முழங்கிடுங்கள் - (2)

            அவர் நமக்காய் ஜீவன் தந்தார் அவரின் ஆடுகள் நாம் - (2) - ராஜாதி

 

7.         நடனத்தோடும் தம்புரோடும் நாதனை துதியுங்கள் - (2)

            மத்தளத்தோடும் குழல் ஊதி சப்தமாய் துதியுங்கள் - (2) - ராஜாதி

 

-

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...