23 March 2026

ஆகாமிய கூடாரம் வேண்டாம் வேண்டாம்

நிஜீ.கீதங்கள்:995

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆகாமிய கூடாரம் வேண்டாம் வேண்டாம்

            ஆலயம் ஒன்றே போதும் தேவா

            அநீதியின் வாசஸ்தலம் வேண்டாம் வேண்டாம்

            நீதியின் வாசஸ்தலம் போதும் தேவா

 

                        தேவா இயேசு தேவா நீரே போதும் நாதா - 2

 

1.         பொய்யான உலக வாழ்வு வேண்டாம் வேண்டாம்

            மெய்யான ஜீவ வாழ்வு போதும் தேவா

            உலகத்தின் ஆசைகள் வேண்டாம் வேண்டாம்

            ஊழியத்தின் வாஞ்சை ஒன்றே போதும் தேவா

 

2.         துன்மார்க்க ஆலோசனை வேண்டாம் வேண்டாம்

            வேதத்தின் தியானம் ஒன்றே போதும் தேவா

            பாவியின் வழிகள் வேண்டாம் வேண்டாம்

            பரிசுத்த பாதை ஒன்றே போதும் தேவா

 

3.         உலகத்தின் இச்சைகள் வேண்டாம் வேண்டாம்

            தேவனின் சித்தம் ஒன்றே போதும் தேவா

            மாயையான இன்பங்கள் வேண்டாம் வேண்டாம்

            மகிமையின் மகிழ்ச்சி போதும் தேவா

 

4.         பாவத்தின் சந்தோஷங்கள் வேண்டாம் வேண்டாம்

            பரிசுத்த ஜீவியம் போதும் தேவா

            எகிப்தின் பொக்கிஷங்கள் வேண்டாம் வேண்டாம்

            இனிவரும் பலன் ஒன்றே போதும் தேவா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...