23 March 2026

ஆகாதது எதுவுமில்லை உம்மால்

நிஜீ.கீதங்கள்:766

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆகாதது எதுவுமில்லை - உம்மால்

                        ஆகாதது எதுவுமில்லை

                        அகிலம் அனைத்தையும்

                        உண்டாக்கி ஆளுகின்றீர்

 

1.         துதி செய்யத் தொடங்கியதும்

            எதிரிகள் தங்களுக்குள்

            வெட்டுண்டு மடியச் செய்தீர் - 2

 

                        உம்மால் ஆகும்.

                        எல்லாம் ஆகும்.

 

2.         அலங்கார வாசலிலே

            அலங்கோல முடவனன்று

            நடந்தானே இயேசு நாமத்தில் - 2 - உம்மால்

 

3.         கோலும் கையுமாக

            பிழைக்கச் சென்றார் யாக்கோபு

            பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் - 2 - உம்மால்

 

4.         கண்ணீரைக் கண்டதாலே

            கல்லறைக்குச் சென்றவனை

            கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் - 2 - உம்மால்

 

5.         ஈசாக்கு ஜெபித்ததாலே

            ரெபேக்காள் கருவுற்று

            இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே - 2 - உம்மால்

 

6.         எலியாவின் வார்த்தையாலே

            சாறிபாத் விதவை வீட்டில்

            எண்ணெய் மாவு குறையவில்லையே - 2 - உம்மால்

 

7.         ஜெப வீரன் தானியேலை

            சிங்கங்களின் குகையினிலே

            சேதமின்றிக் காப்பாற்றினீர் - 2 - உம்மால்

 

8.         கானவூரில் வார்த்தை சொல்ல

            கப்பர்நாகூம் சிறுவனங்கே

            சுகமானான் அந்நேரமே - 2 - உம்மால்

 

9.         தண்ணீரால் ஜாடிகளை

            கீழ்படிந்து நிரப்பினதால்

            திராட்சை ரசம் வந்ததையா - 2 - உம்மால்

 

 

- பெர்க்மான்ஸ்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...