23 March 2026

ஆகா பூலோக வாழ்வே அநித்தியம்

கீ.கை:482

To Download Txt Lyrics file

 

 

 

482. இராகம்: பியாகடை.                                                                                                     தாளம்: சாப்பு.

 

                             பல்லவி

 

                   ஆ, ஆ! பூலோக வாழ்வே! அநித்தியம்

 

                             அனுபல்லவி

 

                   சாகா வரங் கொண்டு, யார்தான் இப் புவி வந்தார் - ஆ ஆ

 

                             சரணங்கள்

 

1.         கதைபோல் வருடங்கள், கழியுதே வீணாய்

            அதை யோ சித்துனது, ஆத்துமம் பேணாய் - ஆ ஆ

 

2.         புகைபோல் பறக்குதே புகலற்ற வாணாள்

            திகையா தேசு பாதம் தேடிக்கொள் இந்நாள். - ஆ ஆ

 

3.         தனமோ பல சொத்துப் பணம் வண்டி ரோதை

            மனமோ அதில் வைப்போன், மதியற்ற பேதை - ஆ ஆ

 

4.         புல்லோ புல்லின் கண் பூவோ இவ்வாணாள்

            கல்லோ அதையுற்றுக் கவனிப்பா யானால் - ஆ ஆ

 

5.         சிறுகால் மனைமக்கள், சேர்க்கை யோர்சந்தை

            ஒருகால் உலைந்திடும், உனக்கென்ன விந்தை - ஆ ஆ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...