23 March 2026

ஆகமங்கள் புகழ் வேதா நமோ

ஞா.கீ:375

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

375. இராகம்: சங்கராபரணம்                            ஆதி தாளம்

 

1.       ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!

            வாகு[1] தங்கு குருநாதா, நமோ நமோ!

            ஆயர் வந்தனை செய் பாதா, நமோ நமோ, - அருரூபா,

 

2.         மாகமண்டல[2] விலாசா,[3] நமோ நமோ!

            மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!

            வான சங்கம் விஸ்வாசா, நமோ நமோ, - மனுவேலா,

 

3.         நாகவிம்பம்[4] உயர் கோலா[5], நமோ நமோ!

            காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ!

            நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, - நரதேவா,

 

4.         ஏக மந்த்ரமுறு[6] பூமா, நமோ நமோ!

            யூக[7] தந்த்ரவதி சீமா, நமோ நமோ!

            ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, - இறையோனே!

 

 

- வேதநாயகம் சாசுதிரியார்



[1] அழகு-ஒளி

[2] விண்ணுலகம்

[3] மாகமண்டல விலாசா= விண்ணெங்கும் வியாபித்திருக்கின்றவனே

[4] வெண்கல சர்ப்பம்

[5] நாகவிம்பம் உயர் கோலா - வான விரிவைப் போன்று எல்லையில்லாமல் மேம்பட்டிருக்கும் அழகினையுடையவனே!

[6] வேதம்

[7] ஞானப்பிரபு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...