23 March 2026

ஆகமங்கள் கடந்தாய் நமோ நமோ

பு.பா.344

To Download Txt Lyrics file

 

1.       ஆக மங்கள்க டந்தாய்

                        நமோ நமோ!

            ஆவின் முன்றில்கி டந்தாய்

                        நமோ நமோ!

            அன்பர் நெஞ்சில்ந டந்தாய்

                        நமோ நமோ!

                        - அருளாளா!

 

2.         சாக வந்துபி ழைத்தாய்

                        நமோ நமோ!

            சாவி னின்றெமைக் காத்தாய்

                        நமோ நமோ!

            சார வந்தருள் செய்தாய்

                        நமோ நமோ!

                        - சாலாதோ!

 

3.         ஊக மெல்லாமி றந்தாய்

                        நமோ நமோ!

            உயிரை ஈந்தெமைக் கொண்டாய்

                        நமோ நமோ!

            உயிர்த்தெ ழுந்துசி றந்தாய்

                        நமோ நமோ!

                        - உரைபோமோ!

 

4.         போக வென்றேப ணித்தாய்

                        நமோ நமோ!

            புனித ஆவியைத் தந்தாய்

                        நமோ நமோ!

            போற்றி! போற்றியுன் பாதம்

                        நமோ நமோ!

                        - புகழ் என்னே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...