ஆ...ஆ...ஆ...ஆ தேவன் மண்ணில் வந்தார்
- அன்பு
தேவன் மண்ணில் வந்தார்
மனிதன் இறையில் சேர
இறை மண்ணில் மனிதன் ஆனார்
- 2
1. மனிதன் தவறிய போது
இறைவன் மீட்பை தெரிவித்தார்
மீண்டும் மீட்பின் செய்தியை
வரலாற்றினிலே பலமுறை தெரிவித்தார்
காலம் நிறைவுற்றப்போது - கடவுள்
மகனை அனுப்பி வைத்தார்
ஞாலம் மீண்டும் இறையில் சேர
இயேசு பாலமாக வந்தார் - 2
2. இருளின் அடிமை நிலையில்
இருந்து விடுதலை தர வந்தார்
இயேசு அருளின் வாழ்வை
அவனியிலேதான் கொடையாய் தரவந்தார்
தந்தை தனது அன்பை இன்று
மகனில் முழுமையாக தந்தார்
மகனும் தனது அன்பை காட்ட
மண்ணின் மனிதனாக பிறந்தார்
No comments:
Post a Comment