24 March 2026

ஆபிரகாமின் விசுவாசம் என்னில் தங்கட்டும்

நிஜீ.கீதங்கள்:243

To Download Txt Lyrics file

 

                   ஆபிரகாமின் விசுவாசம் என்னில் தங்கட்டும்

                        ஈசாக்கின் ஆசீர்வாதம் என்னில் தங்கட்டும்

                        அசைவாடும் தேவ ஆவி அசைவாடுமே

                        அன்புள்ளோனாய் என்னை மாற்றி அசைவாடுமே

 

1.         உயிர்ப்பிக்கும் தேவபெலன்

            என் மேல் வரட்டும்

            உன்னதத்தின் தேவபெலன்

            என் மேல் வரட்டும்

            அசைவாடும் தேவபெலன்

            என் மேல் வரட்டும்

            ஆண்டு கொள்ளும் தேவபெலன்

            என் மேல் வரட்டும்

 

2.         கட்டுகளை அறுக்கும் பெலன்

            என் மேல் வரட்டும்

            கடன் தொல்லை மாற்றும் பெலன்

            என் மேல் வரட்டும்

            வியாதிகளை நீக்கும் பெலன்

            என் மேல் வரட்டும்

            செய்வினைகள் அகற்றும் பெலன்

            என் மேல் வரட்டும்

 

3.         ஆவியில் ஜெபிக்கும் பெலன்

            என் மேல் வரட்டும்

            அபிஷேக வார்த்தை பெலன்

            என் மேல் வரட்டும்

            கவலை கண்ணீர் மாற்றும் பெலன்

            என் மேல் வரட்டும்

            சிலுவை கொடி சுமக்கும் பெலன்

            என் மேல் வரட்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...