24 March 2026

ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே

நிஜீ.கீதங்கள்:1032

To Download Txt Lyrics file

 

          ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

            யாக்கோபின் தேவனே ஆசீர்வதியும்

 

                        ஆசீர்வதியுமே ஆசீர்வதியுமே

                        சீயோனில் இருந்து ஆசீர்வதியுமே

 

1.         சின்னவரெல்லாம் ஆயிரம் ஆகட்டும்

            சிறியவரெலலாம் பெரிய ஜாதியாகட்டும்

            மகா பெரிய மனிதனாய் பெயரை பெருமைப்படுத்துமே

            என்னை ஆசீர்வதிப்பவரை ஆசீர்வதித்திடும் - ஆசீர்வதியுமே

 

2.         வியாதி நோய் எல்லாம் விலகிப் போகவே

            அப்பம் தண்ணீரை நீர் ஆசீர்வதியுமே

            நூறு மடங்கு பலனை நான் கொடுக்க வேண்டும் தெய்வமே

            ஆயிரம் மடங்கு அதிகமாய் விருத்தியடையவே - ஆசீர்வதியுமே

 

3.         கோடா கோடியாய் பலுகிப் பெருகவே

            சத்துரு வாசலை நான் சுதந்தரிக்கவே

            ஒருவழியாய் வருபவன் ஏழு வழியாய் ஓடிட

            பெலன் தாரும் தேவனே ஜெயமெடுக்கவே - ஆசீர்வதியுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...