24 March 2026

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

நிஜீ.கீதங்கள்:524

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

                        யாக்கோபின் தேவனவர் - என்னை

                        அழைத்தும் உன்னத வழியில்

                        என்றென்றும் நடத்திடுவார்

 

1.         வனாந்திரமோ வாடாத மனமே

            காடையை அனுப்பிடுவார்

            தண்ணீர் இல்லையோ - எண்ணிப்பார்

            அவரின் நன்மைகள் எத்தனையோ - ஆபிரகாம்

 

2.         சோதனை வேளையோ சோராதே மனமே

            இயேசுவை சார்ந்திடுவாய்

            யோர்தானை கடந்து - இயேசுவை பற்றிக் கொள்

            என்றென்றும் ஜீவிப்பாய் - ஆபிரகாம்

 

3.         கசந்த மாராவோ கவலை வேண்டாமே

            கர்த்தர் உன்னோடே உள்ளார்

            ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து

            வெற்றியை சேர்த்திடுவாய் - ஆபிரகாம்

 

4.         அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து

            அனுதினம் ஜீவிப்பாயோ

            அவரின் சித்தம் நித்தமும் செய்ய

            ஆவலாய் கீழ்ப்படிவாய் - ஆபிரகாம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...