24 March 2026

ஆமென் அல்லேலூயா மகத்துவத்

ஞா.கீ:114

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

114. இராகம்: இங்கிலீஸ்                                 ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா;

            ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா.

 

                             அனுபல்லவி

 

                        ஆம் அனாதி தந்தார், வந்தார், இறந்

                        துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

 

                             சரணங்கள்

 

1.         வெற்றிகொண் டார்ப்பரித்து-கொடும்வே

            தாளத்தைச் சங்கரித்து,-முறித்து;

            பத்ராசனக்[1] கிறிஸ்து-மரித்து,

            பாடுபட்டுத்தரித்து, முடித்தார். - ஆமென்

 

2.         வேதம் நிறைவேற்றி,-மெய் தோற்றி,

            மீட்டுக் கரையேற்றி,-பொய் மாற்றி,

            பாவிகளைத் தேற்றி,-கொண்டாற்றி,

            பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். - ஆமென்

 

3.         சாவின் கூர் ஒடிந்து,-மடிந்து,

            தடுப்புச் சுவர் இடிந்து,-விழுந்து,

            ஜீவனே விடிந்து,-தேவாலயத்

            திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. - ஆமென்

 

4.         தேவ கோபந் தீர்ந்து,-அலகையின்

            தீமை எலாஞ் சோர்ந்து-முடிந்தது;

            ஆவலுடன் சேர்ந்து-பணிந்துகொண்

            டாடும், களி கூர்ந்து மகிழ்ந்து - ஆமென்

 

 

- வேதநாயகம் சாசுதிரியார்



[1] தலைமை ஆசனம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...