24 March 2026

ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும்

நிஜீ.கீதங்கள்:1492

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே

                        முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே

                        இருந்தவர் நீரே, இருப்பவர் நீரே, வருபவரும் நீரே - (2)

                        என் கண்ணீரை துடைக்க, என் மன பாரம் நீக்க

                        தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே - (2)

                        மீண்டும் வருபவரே - ஐயா

                        மீண்டும் வருபவரே

 

1.         ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா

            இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா - 2

            உம்மைப் போல நேசிக்க யாருண்டு உலகில் - (2)

            என் பேச்சும் நீரே என் மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரே - (2)

            உயிரோடு கலந்தீரே - என் உயிரோடு கலந்தீரே

 

                        மாறநாதா மாறநாதா

                        மாற நாதா மாற நாதா சீக்கிரம் வாருமையா மாறநாதா - எங்கள் - (2)

 

2.         செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்

            உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியது - 2

            என் காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்து விட்டேன் - (2)

            என் தாயும் நீரே, தகப்பனும் நீரே என் வாழ்வின் எல்லாம் நீரே - (2)

            என் வாழ்வின் எல்லாம் நீரே - (2) - மாறநாதா

 

3.         இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒருநாள் மாறிவிடும்

            வருங்காலத்தின் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்து விடும் - 2

            பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோனைக் காண்போம் - (2)

            நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் தவிப்பும் சஞ்சலமும் ஓடிப் போகும் - (2)

            தவிப்பும் சஞ்சலமும் ஓடிப் போகும் - (2) - மாற நாதா

 

 

- Pastor Lucas Sekar

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...