24 March 2026

ஆதியந்தம் அனைத்துமான உலக ஜோதியே

பா.கீ:3

To Download Txt Lyrics file

 

1.       ஆதியந்தம் அனைத்துமான உலக ஜோதியே

          ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே

            ஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே

            பாத சரண் பற்றி நின்றிடும் பரம ஜோதியே

 

                        வந்தருள்வீரே காத்தருள்வீரே

                        தூய்மை பெறவே அருள் ஈந்திடுவீரே

 

2.         பாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகா

            பாரில் மக்கள் வாழ்வை காக்கும் லோக நாயகா

            பக்தர் போற்றிப் பாடிப்புகழும் கருணை நாயகா

            பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா - வந்தருள்வீரே

 

3.         பாவி வாழ்வை மாற்ற வந்த ஞான குருபரா

            பாரில் மனிதப் பிறவி கொண்ட தெய்வ குருபரா

            பாடுபட்டு தன்னை ஈந்த கருணைக் குருபரா

            பாவம்போக்கி என்னை மீட்ட வேதக் குருபரா - வந்தருள்வீரே

 

4.         நற்கனி தந்து காக்கும் தூய நாயகா

            ஏற்றவரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகா

            அறவழியில் நடத்திச் செல்லும் அருள் நாயகா

            பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா - வந்தருள்வீரே

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...