24 March 2026

ஆதிதேவன் அருளைப் பெற்று அகிலம் வாழாதா

நிஜீ.கீதங்கள்:2484

To Download Txt Lyrics file

 

                   ஆதிதேவன் அருளைப் பெற்று அகிலம் வாழாதா

                        ஜோதி தேவன் சித்தம் செய்து

                        சொர்க்கம் போகாதா

 

                                    நீதி தேவனே இயேசு இராஜனே

                                    நித்திய தேவனே என் ஆத்தும நேசரே

 

1.         தீப்பிழம்பாய் ஆன பின்னே

            தீக்குணந்தான் தெரியுமே

            தெய்வத்தோடு சேர்ந்த பின்னே

            பேய்க் குணங்கள் நீங்குமே

 

2.         பிறர் மகிழ தான் மகிழும்

            பார்த்து பார்த்து பரவசிக்கும்

            கறைகள் இல்லா உறவு சேரும்

            கஷ்ட நஷ்டம் ஏற்றுக் கொள்ளும்

 

3.         தீது எண்ணப் போகாது

            தீமை ஒன்றும் அணுகாது

            வாது சூது அறியாது

            வானவர் துணை விலகாது

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...