24 March 2026

ஆதி சபையில் நடந்தது போல்

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆதி சபையில் நடந்தது போல்

                        எங்கள் சபையில் நடக்கணுமே

                        ஆவியின் அபிஷேகம் இன்று வேண்டுமே

                        அக்கினியின் காற்று வீசணுமே

 

1)         தேவனுக்கே உகந்த பரிசுத்த வாழ்வு

            எங்கள் சபையில் காணணுமே

            தேவனுக்கு பயப்படும் பயம் எல்லாம்

            எங்கள் சபையில் மலரட்டுமே

 

2)         உபத்திரவம் வியாகுலம் பாடுகளும்

            பசியும் மரணம் வந்தாலும்

            பரமன் இயேசுவை விட்டு பிரியா

            விசுவாச வாழ்வு மலரட்டுமே

 

3)         பொன்னும், பொருளும் வேண்டாமே

            மகிமையின் அபிஷேகம் வேண்டுமே

            எங்கள் ஊழியத்தில் ஊற்றிடுமே

            எங்கள் சபையும் வளரட்டுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...