24 March 2026

ஆண்டோரென் ஆயராய் ஆளும் போதே

புத்தெழுச்சி:398

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

          ஆண்டோரென் ஆயராய் ஆளும் போதே

            அனுகுமோ ஓர்குறை என்மீதே.

 

                             அனுபல்லவி

 

                        மாண்பொருள் மாமலை மேய்த்திருப்பார்

                        மாசில்லா நீர்நிலை சேர்த்தருள்வார்

 

1.         தழைத்திடத் தம்முயிர் பொழிந்தருள் வார்

                        தனதரும் தகைமையில் அழைத்தணைப் பார்

            அழைத்தெனை அருள்நெறிப் படுத்துகின்றார்

                        அருள்கனிந் தென்றுமே நடத்துகின்றார்

 

2.         சாவிருள் ஆழ்கெவி இறங்கிடினும்

                        சாடிடும் தீமைக்கும் நான் அஞ்சிடேன்

            தேவரென் னோடிருந் தாற்றுகின்றார்

                        திகழ்தடி கோலினால் தேற்றுகின்றார்

 

3.         இறைவனின் வீட்டினில் நிலைத்திருப்போம்

                        என்றென்றும் இன்பமே களித்திருப்போம்

            நறுமண நெய்ஆடல் மிகுந்தளித்தார்

                        நலம் பொங்கப் பகைவர்முன் விருந்தமைத்தார்

 

4.         மனமெனும் நன்கலம் நிரம்பியதே

                        மகிழின்ப மங்கலம் பொங்கியதே

            எனைத் தொடர்ந்தே நன்மை இரக்கமுமே

                        என்றுமே உடன்வரும் பெருக்கமுமாய்

 

 

- வீ.ப.கா. சுந்தரம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...