24 March 2026

ஆண்டவர் என் ஆயன்

நிஜீ.கீதங்கள்:2077

To Download Txt Lyrics file

 

                   ஆண்டவர் என் ஆயன்

                        எனக்கேதும் குறையில்லையே - 2

 

1.         பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்பவர்

            ஆண்டவர் என் ஆயன் - 2

            சமாதான நதிக்கு அழைத்துச் செய்பவர் - (2)

            ஆண்டவர் என் ஆயன் - ஆண்டவர்

 

2.         இருள் சூழ்ந்த பள்ளத்தில் நான் நடந்தாலும்

            எதற்கும் பயமில்லையே - 2

            உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றும் - (2)

            ஆண்டவர் என் ஆயன் - ஆண்டவர்

 

3.         எதிரிகள் முன்னே விருந்தினைச் செய்பவர்

            ஆண்டவர் என் ஆயன் - 2

            என் தலையில் நறுமண தைலம் பூசி - (2)

            என் பாத்திரம் நிரப்புகின்றீர் - ஆண்டவர்

 

4.         என் வாழ்நாள் எல்லாம் உம் அருளும் நலமும்

            பேரன்பும் புடை சூழும் - 2

            நான் ஆண்டவர் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - (2)

            வாழ்ந்து மகிழ்ந்திருப்பேன் - ஆண்டவர்

 

 

- Bro. Christudas

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...