07 August 2024

நல்லப் போர்ச்சேவகனாய் வரும்

நல்லப் போர்ச்சேவகனாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நல்ல போர்ச் சேவகனாய் - வரும்

            பாடுகளில் பங்கு பெறுவோம்

                        தேவன் தரும் பெலத்தால் வரும்

                        தீமைகளைத் தாங்கிடுவோம்

 

1.         பக்தியோடு வாழ விரும்பும்

            பக்தர்கள் யாவருக்கும்

            பாடுகள் வரும் என்று

            பவுல் அன்று சொல்லி வைத்தாரே - தேவன் தரும்

 

2.         வேதனைகள் வழியாகத்தான்

            இறையாட்சியில் நுழைய முடியும்

            சிலுவை சுமந்தால்தான்

            சீடனாக வாழ முடியும் - தேவன் தரும்

 

3.         துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்

            வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்

            வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட

            ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்வோம் - தேவன் தரும்

 

4.         இயேசுவின் நாமத்தினிமித்தம்

            எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்

            என்று இயேசு சொல்லி வைத்தாரே

            அதுதானே நடக்கிறது - தேவன் தரும்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=fpWZcnvvdMs

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...