அழகு மட்டும் இருந்தா போதாதைய்யா
அழகு தேவனோடே இருக்கணுமைய்யா
வாசிப்பதிலே வல்லவனா நீ
காரியத்திலே கெட்டிக்காரனா
தேவ ஆவியால் நிறைய வேண்டுமே
தேவ ஆவியால் இயங்க வேண்டுமே
ஆவியோடும் பாடுகிறேன்
உண்மையோடும் வாசிக்கிறேன்
ஆண்டவரை ஆராதிக்கிறேன்
- 2
1. வழி மாறி போகாதய்யா
பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதே
தடுமாறி விழுந்தவன் கூட
தேடி பிடித்து வந்திடுவானே
பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்
பரலோக அன்பு என் கூட இருக்கிறார்
கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பா
கடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா
- ஆவியோடும்
2. ஆடு மேய்க்க அனுப்பப்பட்டவன்
ஆண்டவரின் சங்கீதத்தால் இழுக்கப்பட்டவன்
கழுதையைத் தேடி அலைந்தவன் கூட
அபிஷேகத்தால் பேசி விட்டானே
பயந்துக் கிடந்த வாலிபன் கூட
பராக்கிரமசாலியாக அழைக்கப்பட்டானே
மீன்களைப் பிடிச்சி மகிழ்ந்தவனே
மனுக்குலத்த பிடிக்க வந்தவனே
- ஆவியோடும்
3. அரசாண்ட சின்னப் பையனும்
அளவில்லாத ஞானியானனே
சொன்னச் சொல்லக் கேட்டவன் தானே
மாபெரும் தீர்க்கத்தரிசி ஆனானே
கிறிஸ்தவனை எதிர்த்து நின்னவன்
கூட
கிறிஸ்துவோடு இணைந்து வாழ
வந்தானே
- APOSTLE DR. A. JAWAHAR SAMUEL & DANIEL JAWAHAR
No comments:
Post a Comment