340.
இராகம்: சாவேரி ஆதி
தாளம்
பல்லவி
ஆற்றிக்கொள்ளுவோம் மனதை;-கிறிஸ்துவினால்
தேற்றிக்கொள்ளுவோம்
மனத்தை.
அனுபல்லவி
சாற்றரிதான
பரன் தோற்ற முடிவில்லானைப்
போற்றிப்
பணிந்து துதித் தேத்தித் திருவருளால் - ஆற்
சரணங்கள்
1. எண்ணம்
கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக
ஏக்கம்
பெருமூச்சும் உண்டாம்;
கண்ணீர்
சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்
கலங்கி
அழுவதும் உண்டாம்;
அண்ணல்
கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்;
நண்ணி
அவரை ஜெபம் பண்ணத் துயரை விட்டு - ஆற்
2. ஏசுவைப்
பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்
தெழுந்து
புறப்படுவார்கள்;
மாசற்ற
தேவன் அவர்கள்-உடனிருக்க
மகிமை
பெற்றிருப்பார்கள்;
பேச
வேண்டுமோ? ஏசு ராஜன் சமுகமதில்
நேசமுடன்
என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ - ஆற்
3. நித்திய
பிதா அவரே; ஆரோக்கியம் அருள்
நீதிச்
சூரியன் அவரே;
சத்தியம்
வழி அவரே; எண்ணம், கவலை;
சஞ்சலம்
தீர்ப்போர் அவரே;
புத்தியில்
உணர்ந்து, தேவ பக்தியுடன் ஜெபம் செய்து
முக்தியை
அடைய மனச்சுத்தி செய்தே அன்பினாலே - ஆற்
- மரியான் உபதேசியார்
No comments:
Post a Comment