சங்கீத சேவை : 13
பல்லவி
ஆனந்தக்
கண்ணீர் பொழியும் தேசமதில்
நான்
அன்பர் இயேசுவின் பொன்முகம் காணுவேன்
அனுபல்லவி
சந்தோசமே அது சந்தோஷமே - எனக்
கானந்தமே பர, மானந்தமே இயேசு - ஆனந்தக்
சரணங்கள்
1. முன்னொரு நாளில் என் கண்ணீரைக் கண்டவர்
என்னிலிருந்து துயரை எடுத்தவர், - 2
இந்நிலந் தன்னில் இவருக்கு நிகரெவர் -
(2)
என்னுள்ளில் தங்கு மியேசுமா ராசன்போல்
- (2) - ஆனந்தக்
2. ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னுடனே
ஒவ்வொரு சோதனை தன்னிலு மிருப்பார். - 2
சார்ந்து இளைப்பாற இயேசுவின் மார்புபோல்
- (2)
பாரில் நினைத்திடில் வேறென றெனக்கில்லை
- (2) - ஆனந்தக்
3. யுத்தக் களத்தில் என் சேனைத் தலைவரும்
யுத்தத்தில் யாதுமே தோல்வி வரவிடார் -
2
ஆதி இடை கடை தோல்வி போற் தோன்றுகில் -
(2)
ஆத்திர மாயன்பர் தாங்கி நடத்துவார் -
(2) - ஆனந்தக்
4. தாயை மறந்து என் தந்தை இழந்து என்
வேலை இனம் ஜனம் யாவும் மறந்தேன் நான்
- 2
என்னுடன் தங்கிடும் இன்ப மகா ராஜன் -
(2)
தன் பாதம் சரணம் எல்லாம் எனக்கவர் -
(2) - ஆனந்தக்
5. என்னை மறவாத காருண்ய பூமானே
உன்னை மறந்து நான் என்ன செய்வேன், ஐயோ!
- 2
என்றும் எனக்குள்ள தெல்லாம் மறந்து நான்
- (2)
இன்றும் என்றும் உமக்கூழியம் செய்குவேன்
- (2) - ஆனந்தக்
No comments:
Post a Comment