473.
இராகம்: ஆனந்தபைரவி ரூபக
தாளம்
பல்லவி
ஆனந்த கல்யாணா! இச்சோபனத்
தாசி தந்தாண்
டருள் கூர்.
அனுபல்லவி
ஞானந்தரும்
சச்சிதானந்தத் தேவனே,
கானக்
கலியாணக் கருணைத் திருவடிவே - ஆன
சரணங்கள்
1. கலியேக[1] அருள்
இலங்க-ஐக்யம் கற்பு நிலை துவங்க
மலி
நன்மை சுகபெலன் வாய்மை புத்திர பாக்யம்
கலி
துன்பத்தில் பொறுமை நாதனே அளித்திடும் - ஆன
2. சந்தொஷமே
பெருக-இகபர சௌபாக்கியம் வருக
எந்தை
நின்பூரண இணையாத அன்புற
சுந்தர
ஆவியைச் சொரிந்தே உற்சாகிதமுற - ஆன
- ரா. ஈ.
No comments:
Post a Comment