பல்லவி
ஆழ்த்தியான
நிலையதினில் அகம் பொழியும் - நம்
ஆண்டவரின் திருவடிகள் அருள் பொழியும்
1. அமர்ந்தே
அவர் இறைவன் என அறிவோம் - வெறும்
ஆரவார
அலையில் அவர் அகப்படமாட்டார்
அமர்
தென்றல் மெல்தொனியில் அவர் உள்ளார் - நம்,
அகமுறைந்தே
ஆண்டு செயல்படுகின்றார்
2. அனுதினமும்
அவரடியில் அமர்ந்திருந்தால் - இவண்
அழிவில்லா
நல்பங்கை அடைந்திடலாம்
சுமை
வாழ்வே இதுவென்று சோர்புறாமல் - அவர்
சுருதி
மொழி கருதியே உள் பலம் காண்போம்
3. அமைதியுடன்
ஆர்வமதும் ஆழ்ந்திருந்தால் - மெய்
அமைதியிலே
ஆவியரின் அனல் பெருகும்
இமை
மூடி இருந்திடினும் மனம் முழங்கும் - நமில்
இறையரசு
இயங்குவதின் பொருள் விளங்கும்
எம். ஞானவரம்
எஸ். இஸ்ரவேல்
No comments:
Post a Comment