14 March 2026

ஆவியைப் பிதாவின் கையில்

கீ.கை:206

To Download Txt Lyrics file

 

206. இராகம்: ஆங்கிலம்.                                                                                                      தாளம்: ஆதி

 

                             ஏழாம் திருமொழி

 

“அப்பொழுது இயேசு, 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி சீவனை விட்டார்”. லூக்.23:46.

 

                   “லோகநாதா லோகநாதா” என்ற மெட்டு

 

1.       ஆவியைப் பிதாவின் கையில்

          ஆவலாய் ஒப்புவித்தீர்

            சீவனுள்ள தேவ சேயாம்

            சேசுநாத சுவாமியே.

 

2.         மரண அதிகாரியையும்

            மரணத்தால் அழித்ததால்

            மரணத்தின் கூர் வல்லமை

            மடக்கிப் பயம் நீக்கினீர்

 

3.         சாவின் பள்ளத் தாக்கி னூடே

            தாசர் செல்லும் நேரத்தில்

            தேவா எங்கள் ஆத்துமாவைத்

            தேற்றித் திடப்படுத்தும்

 

4.         சாவே உன்கூர் எங்கே யென்று

            செயகீதம் பாடியே

            தேவலோகம் சேர்ந்தென் றென்றும்

            சேமமாக வாழச் செய்வீர்

 

5.         பாவி பயமின்றிச் சாக

            பார்ப்பே னுந்தன் மாதிரி

            தேவ சாயல் என்னில் காண

            தேடுவேன் உம் நீதியை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...