14 March 2026

ஆவியை அனுப்பும் ஐயா

புத்தெழுச்சி:350

 

 

Text file Download

 

சங்கராபரணம்                                                       ஆதிதாளம்

 

                                    பல்லவி

 

            ஆவியை அனுப்பும் ஐயா - அடியார்க்கும

                தாவியை அனுப்பும் ஐயா,

 

                                                அனுபல்லவி

 

                                கூவியழைக்கும் எங்கள் குறைகள் அனைத்தும் போக

                                மேவி இவ்விடம் வந்தெம் மீது கருணையாக - ஆவியை

 

                                    சரணங்கள்                      

 

1.              தாகமுள்ளவருக்கு - ஜீவத் தண்ணீரைத்

                தருவேன் என்று சொன்னீரே!

                தாகம் தீர இனித் தாகமே இல்லாமல்

                வேகமாய் இதயத்தில் ஜீவ நதிகள் ஓட - ஆவியை

 

2.              உலர்ந்த எலும்புகள் மேல் - உமதாவியை

                ஊதியருளுமையா;

                கலகத்துப் போனோம் காய்ந்தே உலர்ந்து போனோம்

                பலனேதுமேயிலாத பாலைவனமே யானோம் - ஆவியை

 

3.              கல்லறைகளிலிருந்து - கட்டோடு நாங்கள்

                கண் விழித் தெழுந்திடவே

                அல்லேலூயா சொல்லி ஆர்ப்பரித்து முழங்க

                நல்ல சுவிசேடத்தை நாடெங்கிலும் வழங்க - ஆவியை

 

4.              உயிர்ப்பிக்க மாட்டீரோ - மீளவும் எம்மை

                உருவாக்க மாட்டீரோ?

                உயிருள்ள சபையாக உலகினிலே விளங்கப்

                பயிர்மீது மழை பெய்த பாங்கினைப் போலவே - ஆவியை

 

5.              அன்பு பொறுமையில்லையே - ஆவியைப் பெற்ற

                அருமை சிறிதும் இல்லையே

                இன்பத் திருமறைதான் எடுத்தே இயம்புகின்ற

                ஏழும் எமது நெஞ்சில் இடம் பெறவும் இல்லையே - ஆவியை

 

6.              ஆதித் திருச்சபைக்கே - எங்களை மீண்டும்

                அழைத்துச் செல்ல மாட்டீரோ?

                வீதியெங்கும் உமதன்பையே விளைத்திடும்

                வினைகளையே செய்ய வரந்தரமாட்டீரோ? - ஆவியை

 

7.              எங்களை நொறுக்கும் ஐயா - ஏசையாநீர்

                எங்களை உருக்குமையா!

                தங்க முகச் சாயல் தங்கும் வரையுருக்கி

                இங்கித உருவாக்கி இதயத்தில் ஒளி செய்யும் - ஆவியை

 

 

- பொ.ஆ. சத்தியசாட்சி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...