ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே - 3 - தினம்
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னைக் காக்கும் புகலிடமே - 3 - தினம்
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே - 3 என்னை விட்டு
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு இராஜா
என் வாழ்வின் ஆனந்தமே - 3
5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே - 3
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
No comments:
Post a Comment