24 March 2026

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)

 

                        நான் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே

 

1.         விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு

            விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் - 2

            உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) - நான்

 

2.         உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்

            சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் - 2

            வாதை அணுகாது தீங்கு நேரிடாது - (2) - நான்

 

3.         பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்

            பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் - 2

            சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் - (2) - நான்

 

4.         கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் - நாம்

            நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் - 2

            சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் - (2) - நான்

 

5.         நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்

            இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா - 2

            இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் - (2) - நான்

 

 

- பெர்க்மான்ஸ்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...