24 March 2026

ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று

நிஜீ.கீதங்கள்:1466

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று

          அவரோடு நான் கெஞ்சி கேட்ட போது

            அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது

            ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார்

 

                        அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்

                        பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்

 

2.         ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று

            மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது

            மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்

            மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் பொங்குதே

 

3.         ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே

            இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும்

            மகிமை மகத்துவம் என்னை மூடிக் கொள்ளும்

            மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்

 

4.         தேவ ஜனத்தோடு நித்திய நித்தியமாக

            ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை

            தூதர் பாடும் என் சொந்தமான தேசம்

            கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே                       

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...