325.
இராகம்: தன்யாசி ஆதி
தாளம் (480)
பல்லவி
ஆதரி, ஐயா; இந்த அவனியில்பேய் எனை
மதியை மயக்குதே
சரணங்கள்
1. சாதாரண
சத்திய வேதா, சம்பூரண சகலலங்காரா,
சங்கை
இலங்கியே எங்கும் நிறைந்திடும்
சார்ந்த
நயகுண சிங்காரா - ஆதரி
2. வையகந்தனை
நடுத்தீர்க்க வரும் வல்லமை அற்புத நயகுணனே,
மழலை
போல் இரங்கியே-சதி செய்யும் பாதகர்க்
காறுதல்
அளிக்கும் நயகுணனே - ஆதரி
3. கேரூபின்
செட்டைகள் மீதினிலேறிக் களிப்புடனே வரும் தாயகனே
கேட்டின்
அலகை மாய்கைக் குள் இருக்கும்
கிஞ்சினர்[1] கைதூக்கும்
தாயகனே - ஆதரி
4. சத்திய
வேதத் திருச்சபையோரும் சம்பிரமமுடன் தழைத் தோங்கிடவே
தாரணியோ
ரனைவோரும் சேர்ந்து
ஸ்வாமி
ஏசு பதம் தேடிடவே - ஆதரி
No comments:
Post a Comment